உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அமெரிக்காவின் புதிய வரைவு - ஜெலன்ஸ்கி வரவேற்பு
அமெரிக்கா தயாரித்துள்ள புதிய போர்நிறுத்த வரைவை ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.
அமெரிக்கா தயாரித்துள்ள புதிய போர்நிறுத்த வரைவை வரவேற்றுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அதன் அடிப்படை கோட்பாடுகள் ஆழமான ஒப்பந்தங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்யா மீது கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை புதுப்பித்துள்ளது.
ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட வரைவு, மிகவும் ரஷ்யாவுக்கு சாதகமாக உள்ளது என்ற விமர்சனத்திற்குப் பிறகு திருத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெலன்ஸ்கி தனது தினசரி உரையில், “இந்த ஆவணத்தின் கோட்பாடுகள் விரிவான ஒப்பந்தங்களாக மாறலாம். அமெரிக்காவின் வலிமை மீது ரஷ்யா அதிக கவனம் செலுத்துகிறது. எனவே, அமெரிக்காவின் பங்கு மிக முக்கியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, ரஷ்ய அதிகாரிகளுடன் அபுதாபியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதேசமயம், ஜெலன்ஸ்கி, “ஜெனீவாவில் எங்கள் குழுக்கள் உருவாக்கிய வரைவு மேசையில் உள்ளது. அதனை அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் நேரடி பங்கேற்புடன் முன்னேற்ற தயாராக உள்ளோம்” என கூட்டணித் தலைவர்களிடம் தெரிவித்தார்.
மேலும், “சில முக்கியமான புள்ளிகள் குறித்து டிரம்ப் உடன் நேரடியாக சந்தித்து பேசத் தயாராக உள்ளேன்” என்றும், “ஐரோப்பாவின் பாதுகாப்பு தொடர்பான முடிவுகளில் ஐரோப்பா பங்கேற்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த புதிய வரைவு, உக்ரைன்-ரஷ்யா போருக்கு அமைதியான தீர்வு காணும் முயற்சியில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்னும் சில சிக்கலான பிரிவுகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Zelensky supports US peace draft, Ukraine Russia war peace framework, US revised plan for Ukraine conflict, Trump Zelensky peace negotiations, Ukraine Russia Abu Dhabi talks, Geneva framework Ukraine peace deal, Europe role in Ukraine peace process, US Ukraine Russia sensitive points, Zelensky daily address peace plan, Ukraine war end US draft principles