மறைமுகமாக மிரட்டும் அமெரிக்கா... ட்ரம்புக்கு எதிர்பாராத பதிலடி தந்த ஜெலென்ஸ்கி
உக்ரைன் போர் தொடர்பில் அந்த நாடு முன்வைக்கும் எந்த கோரிக்கைகளையும் ஏற்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஒரு கசப்பான பதிலடியை உக்ரைன் ஜனாதிபதி அளித்துள்ளார்.
ட்ரம்புக்கு பதிலடி
ஜேர்மனியின் மியூனிக் நகரில் நடந்த மியூனிக் பாதுகாப்பு உச்சிமாநாட்டிலேயே ஊடகவியலாளர்களிடம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ட்ரம்புக்கு பதிலடி அளித்து தமது முடிவை அறிவித்துள்ளார்.
உக்ரேனிய அதிகாரிகள் அமெரிக்காவிற்கு ஒப்பந்தத்தின் வரைவு நகலை அளித்த ஒரு நாளுக்குப் பிறகு ஜெலென்ஸ்கியின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மட்டுமின்றி, ஐரோப்பா தலைவர்கள் மற்றும் உக்ரைனின் பங்களிப்பு இல்லாமல் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் இணைந்து போரை முடிவுக்குக் கொண்டுவர இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே ஜெலென்ஸ்கி முக்கிய முடிவை அறிவித்துள்ளார்.
ஜேர்மனியில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஜெலென்ஸ்கி, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான ஒப்பந்தத்தைத் தடுத்ததாகக் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தமானது அமெரிக்காவிற்கு ஏராளமான உக்ரைனிய இயற்கை வளங்களை அணுக அனுமதிக்கும் என்றார்.
எங்களைப் பாதுகாக்காது
இந்த ஒப்பந்தமானது உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும், எங்களைப் பாதுகாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்காக அமெரிக்கா செலவிட்டுள்ள தொகைக்கு பதிலாக உக்ரைனின் கனிம வளங்களை கைப்பற்ற தொழிலதிபரான டொனால்டு ட்ரம்ப் திட்டமிடுகிறார்.
ட்ரம்பின் ஒப்பந்தமானது உக்ரைன் அமைச்சர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதியால் அந்த ஒப்பந்தத்தை முடக்க முடியும். தற்போது ஜெலென்ஸ்கியும் அதையே குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் ஒப்பந்தம் தயாரிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, அதனாலையே அமைச்சர்களும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனது கருத்துப்படி, அது எங்களைப் பாதுகாக்காது. அது எங்களை, எங்கள் நலன்களைப் பாதுகாப்பதாக தெரியவில்லை என்றார் ஜெலென்ஸ்கி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |