ட்ரம்பின் தூதர்களை கடுமையாக விமர்சித்த ஜெலென்ஸ்கி
ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பதற்காக ட்ரம்பின் தூதர்கள், மீண்டும் மீண்டும் மாஸ்கோவிற்கு பயணம் செய்ததை வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ளார்.
ட்ரம்பின் தூதர்கள்
அமெரிக்க தூதர்களான ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பலமுறை மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை அவர்கள் ஜனவரி மாதம் சந்தித்துள்ளனர். முன்பாக, டிசம்பர் மாதம் நான்கு மணிநேரம் உரையாடினர்.
ஆனால் விட்காஃப், குஷ்னர் இருவரும் இதுவரை ஒருமுறை கூட உக்ரைனுக்கு பயணம் செய்யவில்லை; மியாமியில் உக்ரேனியத் தூதுக்குழுவினரை உபசரித்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

மரியாதைக் குறைவான செயல்
இதனைக் குறிப்பிட்டு உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசும்போது, உக்ரைனின் சிக்கலான பயண ஏற்பாடுகள் அவர்களுக்கு சிரமமாக இருந்ததால் விட்காஃப், குஷ்னரை நாட்டிற்கு வெளியே சந்திக்க முடியும் என்றார்.
மேலும் பேசிய அவர், "அவர்கள் (தூதர்கள்) ஒருமுறை கூட உக்ரைனிற்கு பயணம் செய்யாதது மரியாதைக் குறைவானது. நமக்கு சிக்கலான ஏற்பாடுகள் உள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன். அவர்களுக்கு விருப்பமில்லை என்றால், நாம் மற்ற நாடுகளில் சந்திக்கலாம்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |