ஸ்டார்லிங்க் சேவை மீண்டும் முழுவேகத்தில்.,டிரம்பிற்கு நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி
Zelensky expreses gratitude trump for starlink restoration: ஸ்டார்லிங்க் சேவையின் வேகத்தை பழைய நிலைக்கு மீண்டும் கொண்டு வந்ததற்காக அமெரிக்காவிற்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்
பழைய வேகத்திற்கு திரும்பிய ஸ்டார்லிங்க்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங் மற்றும் ஸ்டார்ஷீல்ட் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் மீண்டும் பழைய வேகத்திற்கு திரும்பி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
உக்ரைனின் இணைய சேவையை சீரமைக்க உதவிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சர்வதேச கூட்டாளிகளுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனின் பாதுகாப்பிற்கு இந்த இணைய சேவையானது மிகவும் முக்கியமானது என்றும் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

டெலிகிராம் பக்கத்தில் இது தொடர்பாக ஜெலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய சீரமைப்பு பணிகள் சனிக்கிழமை காலைக்குள் நிறைவடைந்ததாகவும் தற்போது இணைய சேவை உக்ரைனிய படைகளுக்கு தேவையான வேகத்தை எட்டி விட்டதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
முன்கள வரிசையில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் தளவாடங்களை ஒருங்கிணைக்கவும், உக்ரைனை தாக்க வரும் ட்ரோன்களை தடுத்து தற்காப்பு அமைப்புகளை இயக்கவும் இந்த அதிவேக இணைய சேவையானது மிகவும் முக்கியமானது என ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.