பாப்பரசர் இறுதிச் சடங்கில் ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம்... வெளிவரும் உண்மையான காரணம்
பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம் கிடைத்ததற்கான உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.
வத்திக்கான் மறுக்கவில்லை
உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை ஆத்திரமூட்ட வேண்டும் என்ற எண்ணத்தினால் அல்ல என்றும் கூறப்படுகிறது. நெறிமுறை மீறப்பட்டு உக்ரைன் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலிருந்து முன் வரிசைக்கு மாற்றப்பட்டார்.
உக்ரைன் ஜனாதிபதி விவகாரத்தில் நெறிமுறை மீறப்பட்டதை வத்திக்கான் மறுக்கவில்லை. மட்டுமின்றி, இன்னொரு தலைவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த ஆசனமானது, கடைசி நொடியில் உக்ரைன் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி தெரிவித்துள்ளார்.
கசிந்துள்ள தகவல்களின் அடிப்படையில் அது டச்சு அரச குடும்ப உறுப்பினருக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்றே கூறப்படுகிறது. வத்திக்கானில் பாப்பரசரின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்வதாக இருந்த நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் மற்றும் ராணி மாக்சிமா ஆகியோர் சொந்த ஊரில் கிங்ஸ் டே என்று அழைக்கப்படும் பிறந்தநாள் விழாவினைக் கொண்டாடியதாக தகவல் கசிந்துள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை மன்னருக்கு 58 வயதாகும், அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் பண்டிகை நாளில் அரச குடும்பத்தினரை வாழ்த்துவதற்காக நூற்றுக்கணக்கானோர் ஆரஞ்சு நிற உடையணிந்து கூடியிருந்தனர்.
பிரெஞ்சு அகர வரிசைப்படி
இதனிடையே, ஜனாதிபதி ட்ரம்புடன் முன் வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் இடம் பெற்றிருந்தார். கடைசி நொடியில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் மனைவியும் முன் வரிசைக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் அவரது மனைவி விக்டோரியா, ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருக்கு பல வரிசைகள் பின்னால் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
சார்லஸ் மன்னருக்கு பதிலாக இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்ட வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கு ஜேர்மனியின் ஓலாஃப் ஷோல்ஸ் பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
வத்திக்கான் பொதுவாக நாட்டின் ஜனாதிபதி, அடுத்து அரசர்கள் மற்றும் ராணியார், அதன் பிறகு நாட்டின் பிரதமர்களுக்கு ஆசனம் ஒதுக்கியிருந்தனர். மட்டுமின்றி, வத்திக்கான் அதன் இருக்கை ஒதுக்கீட்டை பிரெஞ்சு அகர வரிசைப்படி அமைத்துள்ளது.
இதனால் அமெரிக்கா États-Unis எனவும் பிரித்தானியா Royaume-Uni எனவும் பெயர் மாற்றப்பட்டதால், ஜனாதிபதி ட்ரம்ப் முன் வரிசையிலும் பிரதமர் ஸ்டார்மர் பல வரிசைகளுக்கு பின்னால் அமரும் சூழல் ஏற்பட்டது.
நெதர்லாந்து மன்னர் தமது பிறந்தநாளை சிறப்பிக்க சென்றதால் உக்ரைன் ஜனாதிபதிக்கு முன் வரிசையில் இடம் பெறும் அரிய வாய்ப்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |