தப்பி ஓடிவிட்டார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி! ரஷ்யா தகவல்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தலைநகரிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்ற அவை தலைவர் Vyacheslav Volodin தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 3வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதனிடையே, தான் தலைநகர் கீவில் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும், அதை உறுதிப்படுத்தும் வகையில் தலைநகர் கீவில் இருந்த படி சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தலைநகர் கீவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்ற அவை தலைவர் Vyacheslav Volodin தெரிவித்துள்ளார்.
நேற்றே ஜெலென்ஸ்கி உக்ரேனிய தலைநகரை விட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் அவசரமாக கீவிவை விட்டு வெளியேறினார். நேற்று அவர் தலைநகரில் இல்லை.
அவரது பாதுகாவலர்களுடன் Lvov நகரத்திற்கு தப்பி சென்றுவிட்டார், அங்கு அவர்கள் வாழ இடமளிக்கப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் வீடியோக்கள் ஏற்கனவே எடுக்கப்பட்டது.
ஜெலென்ஸ்கி Lvov-க்குப் புறப்படுவது பற்றிய தகவல் உக்ரைனின் சட்டமன்றமான ராடாவின் பிரதிநிதிகளிடமிருந்து வந்தது என Vyacheslav Volodin தெரிவித்துள்ளார்.