உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும்? ஜெலென்ஸ்கி மற்றும் உக்ரைனிய மக்களின் நம்பிக்கை
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது இந்த ஆண்டு முடிவுக்கு வரும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போரானது தற்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நேரத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் பெரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், உக்ரைனுக்கு அமைதியை கொண்டு வந்தாலோ, நேட்டோ உறுப்பினராக உக்ரைனை அங்கீகரித்தாலோ தன்னுடைய ஜனாதிபதி பதவியை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்தார்.
ஜெலென்ஸ்கி நம்பிக்கை
இந்நிலையில் நோர்வே நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் “3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரின் முடிவில் உக்ரைன் மக்களின் தற்போதைய நம்பிக்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஜெலென்ஸ்கி, இந்த வருடம் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகவும் கடினமான சூழல்" என தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் ஆண்டுகளில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க உக்ரைனுக்கு விரைவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவது தங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும் ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |