G7 உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு
G7 உச்சி மாநாட்டிற்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.
G7 மாநாடு ஜூன் 15 முதல் 17-ஆம் திகதி வரை ஆல்பெர்டா மாகாணத்திலுள்ள கனனாஸ்கிஸ் பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த தகவலை கனேடிய அரசியல் செய்தி நிறுவனமான CBC News உறுதிப்படுத்தியுள்ளது.
கணேடிய பிரதமருடன் நடந்த தொலைபேசி உரையாடல் பற்றி ஜெலென்ஸ்கி, "மிகவும் பயனுள்ளதாகவும் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது" எனக் குறிப்பிட்டார்.
G7 மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் உக்ரைன், தன் நிலையை உலக அரங்கில் வலுப்படுத்துவதுடன், உதவிகள் மற்றும் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் நாடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |