உக்ரைன் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார்! ரஷ்யா உறுதி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக ரஷ்யா நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் Vyacheslav Volodin உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி உக்ரைனை விட்டு தப்பி ஓடிவிட்டார். Lvov நகரில் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என உக்ரைன் எம்.பி-க்கள் கூறினார்.
ஜெலன்ஸ்கி தற்போது போலந்தில் இருக்கிறார் என Vyacheslav Volodin அவரது டெலிகிராம் சேனில் பதிவிட்டுள்ளார்.
6 நாட்களுக்கு முன் ஜெலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவிவை விட்டு வெளியேறி Lvov நகருக்கு தப்பி ஓடிவிட்டதாக Vyacheslav Volodin தெரிவித்திருந்தார்.
ஆனால், Vyacheslav Volodin கூற்றுகள் பொய் என அம்பலப்படுத்தும் வகையில், ஜெலன்ஸ்கி கீவில் நகரில் இருந்த படி சமூக வலைதளங்களில் பல வீடியோக்ளை வெளியிட்டார்.
இந்நிலையில் , தற்போது ஜெலன்ஸ்கி போலந்திற்கு தப்பி ஓடிவிட்டதாக Vyacheslav Volodin தெரிவித்துள்ள நிலையில், இந்த கூற்று குறித்து தற்போது வரை உக்ரைன் ஜனாதிபதி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேசமயம், இரண்டு நாட்களுக்கு முன் தான் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, தான் கீவில் தங்கியிருக்கும் இடத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.