புடின் - ஜெலென்ஸ்கி சந்திப்பால் பலனேதும் இல்லை... ஜேடி வான்ஸ் திட்டவட்டம்
ஜனாதிபதி ட்ரம்ப் கலந்துகொள்ளாமல் புடின் மற்றும் ஜெலென்ஸ்கியின் சந்திப்பால் பலனேதும் இல்லை என துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமைதியை ஏற்படுத்த வாய்ப்பில்லை
இந்த வாரம் அலாஸ்காவில் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டர்ம்ப் ஆகியோர் உக்ரைன் போர் தொடர்பில் முதல் முறையாக நேரடியாக சந்தித்து விவாதிக்க உள்ளனர்.
ஆனால் உக்ரைன் விவகாரம் தொடர்பில் விவாதிக்க முன்னெடுக்கப்படும் சந்திப்பில் அந்த நாட்டின் தலைவருக்கு மறுப்பு தெரிவித்து வருகிறது ரஷ்யா. இந்த நிலையில் ஜேடி வான்ஸ் தெரிவிக்கையில், இரு தரப்பினரையும் நேரிடையாக சந்திக்க வைத்து கருத்து வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம்.
ஆனால் தற்போதைய சூழலில் அது சாத்தியமல்ல என்றும், உக்ரைன் நிர்வாகத்திடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உக்ரைன் விவகாரத்தில் உக்ரைன் பிரதிநிகள் கலந்துகொள்ளாமல் எடுக்கப்படும் முடிவுகள் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த வாய்ப்பில்லை என உக்ரைன் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.
விட்டுக்கொடுப்பதாக இல்லை
மேலும், எந்த ஒரு காரணத்தாலும் ரஷ்யாவிற்கு எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, எங்களுக்கு எதிரான எந்த முடிவுகளும், உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும், அமைதிக்கு எதிரான முடிவுகளே. அதனால் எதையும் சாதிக்க முடியாது என தமது சமூக ஊடகத்தில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பாளர்களுக்கு தங்கள் நிலத்தை உக்ரைன் விட்டுக்கொடுப்பதாக இல்லை என்றும் ஜெலென்ஸ்கி பதிவு செய்துள்ளார். இதனிடையே, லண்டனில் உக்ரைன் தலைவர் ஜெலென்ஸ்கி, ஜேடி வான்ஸ், பிரதமர் ஸ்டார்மர், வெளிவிவகார அமைச்சர் டேவிட் லாமி ஆகியோர் சந்தித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |