காயமுற்ற உக்ரைன் போராளிகளை மருத்துவமனைக்கு சென்று கௌரவித்த ஜெலென்ஸ்கி!
உக்ரைனில் ரஷ்ய படைகளுக்கு எதிராக போரில் காயமுற்ற வீரர்களை கவுரவிக்க ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேரில் சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.
தலைநகர் கீவில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்ற உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காயம்பட்ட இராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அவர்களுடன் சிரித்த நேரம் உரையாடி புகைப்படங்களை கேட்டுக்கொண்டார். மேலும், போரில் கொல்லப்பட்ட வீரர்களை 'உக்ரைனின் மாவீரர்கள்' என அறிவித்து கௌரவித்தார்.
அப்போது, படுக்கையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனியர் லெப்டினன்ட் Hutsul Volodymyr Olesksandrovych-க்கு, ரஷ்ய இராணுவ உபகரணங்களின் 25 யூனிட்டுகளை அழித்ததற்காகவும், சுமார் 300 படையெடுப்பு வீரர்களைக் கொன்றதற்காகவும் பட்டமும் பதக்கமும் கொடுத்து கவுரவித்தார்.
Президент України Володимир Зеленський відвідав у госпіталі поранених захисників України ??
— Defence of Ukraine (@DefenceU) March 13, 2022
? «Хлопці, швидше одужуйте. Вірю: найкращим подарунком до вашої виписки буде наша спільна перемога!» - зазначив @ZelenskyyUa pic.twitter.com/lHYZJHWvp8
மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை உக்ரைனிய பாதுகாப்பத் துறை அதன் அதிகாரப்பூரவ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், "நண்பர்களே, விரைவில் குணமடையுங்கள், நம்முடைய பொதுவான வெற்றி மட்டுமே உங்களுகான் சிறந்த பரிசாக இருக்கும்" என்று வீரர்களிடம் ஜெலென்ஸ்கி கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் சரியான இடம் உறுதி செய்யப்படவில்லை. அனால், உக்ரைன் ஜனாதிபதி மருத்துவமனைக்கு வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
President Zelensky walked to a hospital today to visit wounded Ukrainian soldiers and award them with state honors for their sacrifices. pic.twitter.com/LI0JScdkX7
— Christopher Miller (@ChristopherJM) March 13, 2022
உக்ரைன் அதிபரின் செயலை "இது சிறந்த தலைமை" என சமூக ஊடகங்களில் மக்கள் பாராட்டிவருகின்றனர்.