ரஷ்ய இராணுவத்திற்கு பில்லியன் கணக்கில் பணம் செல்வது பேராபத்து - கண்டிக்கும் ஜெலென்ஸ்கி
ரஷ்ய எண்ணெய் மீதான தடைகள் தளர்த்தப்பட்டதை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டித்துள்ளார்.
தடை விலக்கு
மத்திய கிழக்கு போரினால் எண்ணெய் விலையேற்றம் ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா வழங்கியிருந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமையன்று, ட்ரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் ஒரு மாத காலத் தடை விலக்கை வெளியிட்டது.
ஜெலென்ஸ்கி ஆதங்கம்
இது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை, அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு எளிதாக்கியது. ஆனால், இந்த அறிவிப்பு உக்ரைனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) இதுகுறித்து கூறுகையில், "எண்ணெய் மீதான தடைகள் தளர்த்தப்பட்டதால் ரஷ்ய இராணுவத்திற்கு பில்லியன் கணக்கில் நிதி கிடைக்கிறது.
ரஷ்ய எண்ணெய்க்காக செலுத்தப்படும் ஒவ்வொரு டொலரும் போருக்கான பணம். இது 10 பில்லியன் டொலர் மதிப்பிலான வளமாகும் - இந்த வளம் நேரடியாக உக்ரைனுக்கு எதிரான புதிய தாக்குதல்களாக மாற்றப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |