ரஷ்யா மீதான பொருளாதார தடை தளர்வு: ஜெலென்ஸ்கி விடுத்த எச்சரிக்கை
Zelensky Oppose Russia sanctions relief: ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவது என்பது உக்ரைன் மீதான தாக்குதலை அதிகரிக்கவே செய்யும் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதல் அதிகரிப்பு
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவது என்பது உக்ரைன் மீதான தாக்குதலை அதிகரிக்கவே செய்யும் என ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெலென்ஸ்கியின் இந்த அறிக்கையானது, உக்ரைனின் சபோரிஷியா(Zaporizhzhia) பகுதியில் குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து ரஷ்யா நடத்திய சமீபத்திய தாக்குதலுக்கு பிறகு வெளிவந்துள்ளது.

குடியிருப்பு மீது கிளைடு பாம்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவில், ரஷ்யாவிற்கு சமீபத்தில் வழங்கப்பட்ட பொருளாதார தளர்வுகளே இந்த உயிர் பலிக்கு காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் தளர்வு
சர்வதேச சந்தைக்கு சுமார் 3 லட்சம் டன் டீசலை ரஷ்யா வழங்க அனுமதிக்கும் வகையிலான தளர்வை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருந்தார்.
இந்த பொருளாதார தடை நீக்கத்திற்கான பதிலாகவே மக்கள் வாழும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தி தங்களது “நன்றியை” வெளிப்படுத்தி இருப்பதாக ஜெலென்ஸ்கி சாடியுள்ளார்.