ஜெலென்ஸ்கியும் புடினும் நேருக்கு நேர்... உக்ரைன் போர் தொடர்பில் அமெரிக்கா சூசகம்
ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முன்னேறியுள்ள நிலையில், ஜெலென்ஸ்கியும் புடினும் மிக விரைவில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சரணடையச் செய்ய
ரஷ்யா மற்றும் உக்ரைன் பகுதிகளில் உயிர் உறையும் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் மின்சார கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்திய உக்ரைன், பல ஆயிரக்கணக்கான ரஷ்ய மக்களை உயிர் கொல்லும் குளிர் வெப்பநிலையில் அவதிப்பட வைத்துள்ளது.

இதுவே, ரஷ்யா தரப்பில் இருந்து போர் தொடர்பில் முக்கிய முடிவெடுக்க காரணமாக அமைந்தது. பல வாரங்களாக, புடின் இந்த உயிர் கொல்லும் குளிர்காலத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி உக்ரேனியர்களை சரணடையச் செய்ய முயன்று வருகிறார்.
ஆனால், தற்போது கடும் குளிரான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ரஷ்யாவின் பல பிராந்தியங்கள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. போரில் மிகவும் கடுமையான தாக்குதல்களைச் சந்தித்த -16C எல்லைப் பகுதி தலைநகர் பெல்கோரோட் மிகவும் பாதிக்கப்பட்டது.
மின்சாரம் மற்றும் வெப்ப விநியோகங்களைத் துண்டிக்க வைத்தது. மட்டுமின்றி, வெளியாட்கள் நுழையத் தடை விதிக்கப்பட்ட நகரமான செவெரோமோர்ஸ்கில் உள்ள ரஷ்ய வடக்குக் கடற்படையின் பிரதான ஆர்க்டிக் கடற்படைத் தளத்தில், ஒரு மர்மமான மின்வெட்டு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே ரஷ்ய மற்றும் உக்ரேனிய உயர்மட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன், ட்ரம்ப் நிர்வாகமும் பங்கேற்ற இரண்டு நாள் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் அபுதாபியில் முன்னெடுக்கப்பட்டது.

சந்திப்பு மிக விரைவில்
ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது நம்பிக்கைக்குரிய ஜிஆர்யு இராணுவ உளவுத்துறைத் தலைவர் அட்மிரல் இகோர் கோஸ்டியுகோவ் தலைமையிலான ஒரு உயர்மட்டக் குழுவை அனுப்பியதைத் தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தைகள் வியக்கும் வகையில் சிறப்பாக நடந்தன.
புடின் மற்றும் ஜெலென்ஸ்கிக்கு இடையேயான நேரடி சந்திப்பு மிக விரைவில் நடக்கும் என நாங்கள் நம்புகிறோம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு திருப்புமுனை அறிவிப்புகளும் வெளியிடப்படாத நிலையில், அனைத்து விடயங்களும் விவாதிக்கப்பட்டன என்று ஒரு அமெரிக்க அதிகாரி கூறியுள்ளார்.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் பிப்ரவரி 1 அன்று அபுதாபியில் நடைபெற உள்ளன, அதைத் தொடர்ந்து மாஸ்கோ அல்லது கீவ்வில் அமர்வுகள் நடைபெறக்கூடும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |