இந்த 5 நாடுகள் கவனம்... விளாடிமிர் புடின் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி
உக்ரைன் வீழ்ந்தால் ஐரோப்பாவில் உள்ள மற்ற ஐந்து நாடுகளை விளாடிமிர் புடின் குறிவைத்துள்ளார் என்று நட்பு நாடுகளுக்கு ஜெலென்ஸ்கி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஆக்கிரமிக்கத் துணிவார்
ரஷ்ய ஜனாதிபதி புடினின் இந்த படையெடுப்பு திட்டங்களை தடுத்து நிறுத்தப்படாவிட்டால், அருகிலுள்ள நாடுகளை அவர் ஆக்கிரமிக்கத் துணிவார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
திங்களன்று உக்ரைன் தலைநகரில் முன்னெடுத்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றிலேயே ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி தொடர்பில் எச்சரித்துள்ளார். சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்துள்ள நாடுகளே புடினின் இலக்கு என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
2014ல் கிரிமியா மக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது போல, ரஷ்ய மொழி பேசும் மக்களை சாக்காகப் பயன்படுத்தலாம் என்றே ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
எஸ்தோனியா, லாத்வியா, போலந்து, மால்டோவா மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தற்போது விளாடிமிர் புடினால் ஆபத்தில் இருப்பதாகக் கருதுவதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய மொழி பேசும் மக்கள், அல்லது அவர்களின் வம்சாவளி, அல்லது அவர்களின் குடும்பங்கள் என இருந்தால், அது எதிர்காலத்தில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றார்.
காலத்தின் கட்டாயம்
ஆரம்பத்தில், அவர்கள் உங்கள் பிரதேசங்களை ஆக்கிரமிக்கவில்லை, ரஷ்ய மொழி பேசும் மக்களைப் பாதுகாக்கிறோம் என்று சொன்னார்கள். இந்த சூழலில் உக்ரைன் வீழும் என்றால் நான் குறிப்பிட்ட அனைத்து நாடுகளும் ரஷ்யக் கொள்கையின் காரணமாக, ரஷ்ய உலகை அமைக்கும் அவர்களின் திட்டத்தால் இந்த ஆபத்து இருப்பதாக நான் நினைக்கிறேன் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
லாத்வியா, எஸ்தோனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகள் ரஷ்ய பேரரசு மற்றும் சோவியத் ஒன்றியத்தின் எல்லைக்குள் இருந்தன. லாட்வியா மற்றும் எஸ்டோனியாவில் மில்லியன் கணக்கான ரஷ்ய மொழி பேசுபவர்கள் உள்ளனர், பல்லாயிரக்கணக்கான மக்கள் மால்டோவாவில் வாழ்கின்றனர்.
கடந்த 2021ல் உக்ரைன் நிர்வாகம் ரஷ்ய பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றிவருவதாக புடின் குற்றஞ்சாட்டியிருந்தார். மட்டுமின்றி இரு நாடுகளும் இணைவது காலத்தின் கட்டாயம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் ஒரு பொதுவான பாரம்பரியத்தை மட்டுமல்ல, பொதுவான விதியையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அவர் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |