ரஷ்யாவினால் ஐரோப்பாவில் இருக்கும் நம் அனைவருக்கும் ஆபத்து! எச்சரிக்கும் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனில் மூன்றில் ஒரு பங்கு மின் நிலையங்களை ரஷ்யா அழித்துள்ளது
தங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை மாற்றம் ரஷ்யாவின் முடிவால், அதன் விளைவுகளால் ஐரோப்பாவில் உள்ள நம் அனைவருக்கும் ஆபத்தாக இருக்கும் என ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யாவின் தாக்குதலால் ஏற்பட்ட பெரும் சேதத்தால் உக்ரைனில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யா தனது எரிசக்தி கட்டத்தை போர்க்களமாக மாற்றிவிட்டதாகவும், குளிர்கால வருகைக்கு முன்னதாக கிவ் மின்சார பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், நாட்டிலிருந்து அகதிகளின் புதிய அலையைத் தூண்டியதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டியது.
கடந்த சில நாட்களாக உக்ரைனில் மின் நிலையங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பை தாக்க டிரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய சபையில் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, 'எங்கள் நாட்டின் எரிசக்தி கட்டமைப்புகளை போர்க்களமாக மாற்ற ரஷ்ய தலைமை கட்டளையிட்டுள்ளதாக தெரிகிறது. இதன் விளைவுகள் ஐரோப்பாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானவை.
உக்ரைனில் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு, மின்சாரம் மற்றும் குளிர்காலத்தை சாமாளிப்பது தொடர்பான பிரச்சனைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ரஷ்யா தாக்குதல்களை தொடுத்துள்ளது. எரிசக்தி கட்டமைப்புகள் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் அதிகமானதால், ஏராளமான உக்ரேனியர்கள் ஐரோப்பா நோக்கி செல்கின்றனர்' என தெரிவித்தார்.
AFP
இதற்கிடையில் கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவது மற்றும் சிறிய அளவிலான மின்சார சேமிப்பு ஆகியவை கூட மின் விநியோக செயல்பாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவர உதவும் என வலியுறுத்தினார்.
மேலும், ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களுக்கு உக்ரேனியர்கள் கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். டினிப்ரோவில் வசிக்கும் ஓல்கா என்ற பெண், 'இது எங்கள் அணுகுமுறையை மாற்றப்போவதில்லை, ஒருவேளை நாங்கள் அவர்களை அதிகமாக வெறுப்போம். ரஷ்யாவில் இருப்பதை விட தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாமல் குளிரில் இருக்கவே விரும்புகிறேன்' என தெரிவித்தார்.