நேட்டோவில் இணைவதற்கு ஈடாக ரஷ்யாவிடம்..ஜெலென்ஸ்கி கூறிய விடயம்
Zelensky said usa suggest donbas to russia for nato: ரஷ்யாவிடம் டான்பாஸ் பகுதியை ஒப்படைக்கலாம் என அமெரிக்கா பரிந்துரைத்ததாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடிவில், நேட்டோவில் இணைவதற்கு ஈடாக ரஷ்யாவிடம் டான்பாஸ் பகுதியை ஒப்படைக்கலாம் என, அமெரிக்கா பரிந்துரைத்ததாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை
அபுதாபியில் அமெரிக்காவின் நடுநிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு திருப்புமுனையும், முன்னேற்றமும் ஏற்படாமல் முடிவடைந்தன.
இதனைத் தொடர்ந்து, டென்மார்க் மற்றும் அயர்லாந்தில் ஐரோப்பியத் தலைவர்களை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்தார்.
நேட்டோவில் இணைவதற்கு ஈடாக
அதன் பின்னர் பேசிய வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky), உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு ஈடாக டான்பாஸ் பகுதியில் உள்ள நிலப்பரப்பை ரஷ்யாவிடம் ஒப்படைக்கலாம் என அமெரிக்கா பரிந்துரைத்ததாக தெரிவித்தார்.
மேலும் அவர், உக்ரைனுடனான போரில் இந்த குளிர்காலப் பிரச்சாரத்திற்காக ரஷ்யா 'எல்லாவற்றையும் பணயம் வைக்கிறது' என்றார்.
அத்துடன் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற கிரெம்ளினின் கோரிக்கைகள் ஆபத்தானவை என்றும்; அவை மேலும் பல போர்களுக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்தார்.
