உக்ரைனிலேயே தயாரிக்கப்படும் பீரங்கிகள்! பிரித்தானிய நிறுவன CEOவை சந்தித்த ஜெலென்ஸ்கி
தங்கள் வீரர்களுக்கு உதவும் சிறந்த ஆயுதங்கள் உக்ரைனிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய CEOவை சந்தித்த ஜெலென்ஸ்கி
பிரித்தானியாவைச் சேர்ந்த BAE Systems எனும் ஆயுத, பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தின் CEO சார்லஸ் வுட்பர்னை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சந்தித்தார்.
உக்ரைனுக்கு போரிட தேவையான ஆயுதங்களை தங்கள் நாட்டிலேயே தயாரிக்க ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜெலென்ஸ்கி ட்வீட்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'உக்ரைனைப் பாதுகாக்க எங்கள் வீரர்களுக்கு தற்போது உதவும் சிறந்த ஆயுதங்கள் உக்ரைனில் தயாரிக்கப்பட வேண்டும். எங்கள் சொந்த ஆயுத உற்பத்தியை மேம்படுத்துவது முதன்மையான முன்னுரிமையாகும்.
குறிப்பாக, பீரங்கி - L119 மற்றும் M777 அமைப்புகள், கவச வாகனங்கள் - வலுவான CV90. BAE System splcயின் இந்த ஆயுதங்கள் உக்ரைனில் தயாரிக்க தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சார்லஸ் வுட்பர்னை சந்தித்தேன். இது மிகவும் பயனுள்ள சந்திப்பு.
உக்ரைனில் நிறுவனத்தின் அலுவலகம். உக்ரைனில் உற்பத்தியின் உள்ளூர்மயமாக்கல். இந்த கூட்டு முடிவு எங்கள் நாடு, முழு ஐரோப்பா மற்றும் சுதந்திர உலகத்தின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டதாகும்.
சுதந்திரத்தை நாங்கள் ஒன்றாக பலப்படுத்துகிறோம். உக்ரைனுக்கான உங்கள் வருகைக்கும் எங்கள் ஒத்துழைப்பின் அர்த்தமுள்ள தொடக்கத்திற்கும் நன்றி!' என தெரிவித்துள்ளார்.
The best weapons that are currently helping our warriors defend Ukraine should be produced in Ukraine. The development of our own weapons production is a top priority.
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 31, 2023
In particular, artillery – L119 and M777 systems, armored vehicles – robust CV90. These are the weapons of… pic.twitter.com/BqExBLpUH7
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |