உக்ரேனிய வீரர்கள் அசாதாரணமான காரியங்களை செய்துள்ளனர்: வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பெருமிதம்
உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தங்கள் வீரர்கள் அசாதாரணமான காரியங்களை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
ட்ரான் தாக்குதல்
ரஷ்யா - உக்ரைன் போர் நீண்டு கொண்டே செல்லும் நிலையில், இருநாடுகளும் ட்ரான் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
உக்ரைனுக்கு பல நாடுகள் உதவி வரும் நிலையில், நெதர்லாந்து F-16 ரக போர் விமானத்தை சமீபத்தில் வழங்கியது.
இந்த நிலையில் உக்ரேனிய வீரர்கள் குறித்து பெருமிதத்துடன் ஜெலென்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
ஜெலன்ஸ்கியின் ட்வீட்
அவரது பதிவில், 'உக்ரேனிய வீரர்கள் அசாதாரணமான காரியங்களை செய்துள்ளனர். போர் நடவடிக்கையின்போது எங்கள் நிலத்தை விடுவிப்பது தற்செயலானது அல்ல என்பதை உக்ரைன் காட்டுகிறது.
எல்லாம் தகுதியானது. இது நமது மக்களின் வீரம் மற்றும் நமது ஆதரவு நாடுகளின் ஆதரவும் தான். இது உக்ரேனியர்கள் தைரியம் மற்றும் அத்தகைய விரும்பத்தக்க பொதுவான முடிவுக்காக உலகம் ஒற்றுமையுடன் உழைக்கிறது' என தெரிவித்துள்ளார்.
Ukrainian warriors have done extraordinary things. Ukraine has shown that the liberation of our land during combat operations is no accident. Everything is deserved. It is the heroism of our people and the defense support from our partners. It is the courage of Ukrainians and the… pic.twitter.com/2CzQ2NiNZR
— Володимир Зеленський (@ZelenskyyUa) August 28, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |