ஜேர்மனின் நாசிசம் தோற்றது போல் ரஷ்யாவும் போரில் தோற்கும்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனின் நாசிப்படை தோற்றது போல், ரஷ்யா உக்ரைனிடம் தோற்கும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy) கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போர் கொண்டாட்டம்
இரண்டாம் உலக போரில் ரஷ்யா ஜேர்மனியிடம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், ராணுவ அணிவகுப்பு மற்றும் இறந்த ராணுவ வீரர்களுக்கான அஞ்சலி செலுத்தப்படும்.
@getty images
இந்த ஆண்டு ஜனாதிபதி மாளிகை தாக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணமாக இந்த விழா கொண்டாட்டத்தை ரஷ்ய அரசு ரத்து செய்திருந்தது.
@sky news
உலகப் போர் வரலாற்றில் ஒரு போரில் ஒரு நாட்டின் மக்கள் அதிகம் உயிரிழந்ததென்றால், அது ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெலென்ஸ்கி எதிர் கருத்து
இந்த நிலையில் ஜேர்மனி ரஷ்யாவிடம் சரணடைந்த நாளின் விழாவில், பேசிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஜெலென்ஸ்கி ‘இதே நாளில் ஜேர்மனின் நாசிப்படையை ரஷ்யா வீழ்த்தியது, ஆனால் அதே போல் உக்ரைன் ரஷ்யாவை வீழ்த்தும்’ என கூறியுள்ளார்.
@afp
ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது டஜன் கணக்கில் டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தியதாக, உக்ரைன் படையினர் தெரிவித்துள்ளனர்.
’ரஷ்ய நாசிப்படையை வீழ்த்தும் போது இருந்த அதே மிருகத்தனத்தோடு தான் தற்போதும் உள்ளது' என உக்ரைன் உலக போரில் நினைவு நாளில் கூறியுள்ளார்.
@ap
சோவித் ஒன்றியத்துடன் இணைந்து செயல்பட்ட ரஷ்யா, தற்போது அதனுடன் இருந்து பிரிந்த நிலையில், 1945ஆம் ஆண்டில் ஜேர்மனின் நாசிப்படை சரணடைந்த நாளை ஐரோப்பிய நாள் என கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.