ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர..ஜி7 மாநாட்டில் பேசவுள்ளதாக தெரிவித்த ஜெலென்ஸ்கி
ஜி7 மாநாட்டில் ட்ரம்புடன் ரஷ்யாவின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர விவாதிக்க உள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
ட்ரம்புடன் சந்திப்பு
பிரான்சில் ஜி7 மாநாடு 15 முதல் 17ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதில் டொனால்ட் ட்ரம்புடன் சந்திப்பு நடத்த உள்ளதாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ட்ரம்புடன் தொலைபேசி உரையாடல் நடத்தியது குறித்து ஜெலென்ஸ்கி கூறுகையில், "தற்போது அமைதியைக் கொண்டுவர உதவக்கூடிய விடயங்கள் குறித்து நானும் ட்ரம்ப்பும் விவாதித்தோம்.
மேலும், போர்க்களத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் நமது நிலை எவ்வாறு வலுப்பெற்றுள்ளது என்பது குறித்தும் ஜனாதிபதிக்கு தெரிவித்தேன்.
ஜி7 உச்சி மாநாட்டில் நடைபெறும் எங்கள் சந்திப்பின்போது இது குறித்து மேலும் விவாதிக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
அமைதியை முன்னெடுத்து செல்லவும், உயிர்களை பாதுகாக்கவும் உதவக்கூடிய சில நல்ல யோசனைகள் எங்களிடம் உள்ளன" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |