ரஷ்யாவின் அடுத்த குறி இதுதான்! முக்கிய தகவலை வெளியிட்ட உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி
ரஷ்யாவின் அடுத்த குறி தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது பிப்ரவரி 24ம் திகதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே போரை முடிவுக்கு கொண்டுவர இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் அடுத்த குறி தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளைக் கைப்பற்றுவதை ரஷ்யா நோக்கமாகக் கொண்டுள்ளது.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்த்து போரிட தேவையான ஏவுகணைகளை எதிர்த்து தாக்கும் ஆயுதங்களை மேற்கு நாடுகள் வழங்கவில்லை.
ரஷ்யப் படைகளை விரட்டியடிக்க தேவையான அனைத்தையும் உக்ரைன் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.