ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது! புடின் இதற்காகவே போரை நடத்துகிறார்.. ஜெலன்ஸ்கி காட்டம்
ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது என கூறியுள்ள ஜெலன்ஸ்கி புடினுக்கு ரஷ்யாவின் குடிமக்களை பற்றி கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கி புத்தாண்டு உரை
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் ஒரு ஆண்டை நெருங்கவுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் மக்களுக்கான புத்தாண்டு உரையில் பேசிய அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா சாத்தானை பின் தொடர்கிறது.
ஒரு நபர் (புடின்) தனது வாழ்நாளின் இறுதி வரை அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போர் நடத்தப்படுகிறது.
AP
மக்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள புடின்
ரஷ்யாவின் குடிமக்களை பற்றி புடினுக்கு கவலை இல்லை. அவர் ஏவுகணைகளுக்கு பின்னாலும், மக்களின் பின்னாலும் ஒளித்து கொண்டிருக்கிறார்.
ரஷ்ய நாட்டு மக்களே அவர் உங்கள் பின்னால் ஒளிந்துகொண்டு உங்கள் நாட்டையும் உங்கள் எதிர்காலத்தையும் எரிக்கிறார் என காட்டமாக பேசியுள்ளார்.