Patriot இடைமறிப்பு ஏவுகணைகளை உடனே கொடுங்க: ஐரோப்பாவை கேட்கும் ஜெலென்ஸ்கி
Zelensky urge euro patriot interceptor missiles: ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து Patriot இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குமாறு, ஜெலென்ஸ்கி ஐரோப்பாவை வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து Patriot இடைமறிப்பு ஏவுகணைகளை வழங்குமாறு ஐரோப்பாவை வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்
நேற்றிரவு உக்ரைனில் நடந்த ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் நான்கு உக்ரேனியர்கள் கொல்லப்பட்டனர்.
டினிப்ரோ பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 வயது சிறுமி உட்பட 22 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) கூறுகையில், "கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ரஷ்யா உக்ரைன் மீது சுமார் 1,600 வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட பல்வேறு வகையான 48 ஏவுகணைகள் மற்றும் சுமார் 2,300 தாக்குதல் ட்ரோன்களை ஏவியுள்ளது" என்றார்.
மேலும், பேட்ரியாட் (Patriot) ஏவுகணை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்றும், ரஷ்யாவின் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்ட Shahed ட்ரோன்களை எதிர்கொள்ள, உக்ரைனின் போர் விமானப் படையினருக்கு நேச நாடுகள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
