சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய ஆதரவு உளவாளி குறித்து வெளியான தகவல்! வைரலாகிவரும் புகைப்படங்கள்
உக்ரைனிய உளவுத்துறையால் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆதரவு உக்ரைனிய உளவாளி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் ரஷ்ய அதிபருடன் இருக்கும் சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன.
மாஸ்கோவில் உள்ள தி இண்டிபெண்டண்ட் நிருபர் Oliver Carroll தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்ட Viktor Medvedchuk ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மிக நெருங்கிய நண்பர் என உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும், ஓலிவர் தனது அடுத்த ட்வீட்டில், இந்த விக்டர் மெட்வெட்சுக் புடினின் ஒரு மகளுக்கு காட்பாதர் என்று தெரிவித்துள்ளார்.
மிகவும் சர்ச்சைக்குரிய நபராக கருதப்படும் உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், ஜெலென்ஸ்கியின் எதிர்கட்சித் தலைவருமான விக்டர் மெட்வெட்சுக், 2021 மே மாதம் உக்ரைனிய அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டார். ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் வீட்டுக்காவலில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
— Denys Cherniavskyi (@cherniavskyiD) April 12, 2022
இந்நிலையில், அவர் நேற்று தலைநகர் கீவில் கண்டுபிடிக்கப்பட்டபோது, உக்ரைன் ராணுவ சீருடையை அணிந்திருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், அவர் முன்னதாக புடினுடன் இருந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகிவருகின்றன.
