உக்ரைன் நோக்கி ஏவப்பட்ட 1300 ட்ரோன்கள்: ரஷ்யாவால் இலக்கு வைக்கப்படும் பொதுமக்கள்
கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யா இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தி இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி டெலிகிராம் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில் இந்த வாரத்தில் ரஷ்யா இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 1300 காமிகேஸ் ட்ரோன்களை ரஷ்யா ஏவி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஏவுகணைகள், 1200 க்கும் அதிகமான வழிகாட்டப்பட்ட வான்வழி குண்டுகளை உக்ரைன் நிலப்பரப்பிற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய தாக்குதலின் முக்கிய நோக்கம்
ரஷ்ய படைகளின் முக்கிய இலக்குகளாக உக்ரைனிய மின் உள்கட்டமைப்புகள் இருப்பதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே சமயம் ரஷ்யா நடத்திய இந்த வான்வழித் தாக்குதல் பொது மக்கள் குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து நடத்தப்பட்டதாக குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி பொதுமக்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனிய வான் பாதுகாப்பு படைகள் அத்துமீறி நுழையும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் பெரும் பகுதிகளை இடைமறித்து அழித்து வருவதற்காக பாராட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |