உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கும் சீனா., ஜெலென்ஸ்கி குற்றச்சாட்டு
உக்ரைன்-ரஷ்யா போரில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
சீனாவின் தலையீட்டால் இந்தப் போர் நீண்ட காலம் நீடிக்கும். சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஷங்ரி லா உரையாடலில் ஜெலென்ஸ்கி இவ்வாறு கூறியதாக CNN தெரிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை உலகிற்கு தவறான சமிக்ஞை என்று ஜெலென்ஸ்கி கூறினார். இதுவும் சீனாவின் கொள்கைகள் தவறு என்பதை நிரூபித்துள்ளது.
அனைத்து நாடுகளின் சுதந்திரத்தை ஆதரிப்பதாக சீனா கூறுகிறது. ஆனால், ஒரு நாட்டை அழிக்க ஆயுதம் கொடுப்பது அல்லது ஆதரவளிப்பது நல்ல விடயம் அல்ல என்று அவர் கூறினார்.
ரஷ்யாவுக்கு சீனா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக சீனாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சீனா இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது.
யுத்தத்தில் தாம் எவருக்கும் ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், ஆயுத ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாட்டை வைத்திருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனா தொடர்ந்து ரஷ்யாவிற்கு நிதி உதவி செய்து வருவதாகவும், பிப்ரவரி 2022-இல் தொடங்கிய போருக்குப் பிறகு, சீனா தொடர்ந்து ரஷ்யாவுடனான தனது உறவை வலுப்படுத்தி வருவதாகவும் ஜெலென்ஸ்கி கூறினார்.
ஜூன் 15-16 திகதிகளில் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உக்ரைனுக்கான சர்வதேச அமைதி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளையும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார். அதற்கு ரஷ்யா தடையாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்வதேச அமைதி மாநாட்டை சீர்குலைக்கும் வகையில் பல நாடுகளுக்கு வழங்கப்படும் விவசாயம், உணவு மற்றும் ரசாயன பொருட்களை தடை செய்யப்போவதாக ரஷ்யா மிரட்டி வருவதாகவும், இந்த மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று பல நாடுகளை ரஷ்யா கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
மாநாட்டில் சீனாவை சேர்க்காதது சீனா யாரை விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.
சீனா போன்ற பாரிய, சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடு புதினின் கைப்பொம்மையாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார். ஷங்கிரி லா பேச்சுவார்த்தையில் சீனாவுடன் பேச்சு வார்த்தைக்கு உக்ரைன் ஆதரவாக இருந்தது. ஆனால், இதுவரை எந்த சீனத் தலைவரையும் சந்திக்கவோ, உரையாடவோ இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine Russia War, China Russia Ukraine, Ukraine President Volodymyr Zelensky, international peace summit