மூன்று ஆண்டுகால போரில் 45,100 உக்ரேனிய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர்: ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுடனான போரில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 45,100 வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளாக ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் நீடித்து வருகிறது. இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நேர்காணல் ஒன்றில் இழப்பு குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரில், உக்ரைன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 45,100 பேர் உயிரிழந்துள்ளனர். இது தவிர மோதலில் 3.9 லட்சம் வீரர்கள் காயமடைந்துள்ளனர்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நிறுத்த பேச்சுவார்ததை நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |