நியாயமான பதிலடி! எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியதை குறிப்பிட்ட ஜெலென்ஸ்கி
ரஷ்யாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கியது நியாயமான பதிலடி என வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தாக்குதல்
ரஷ்யா மீது உக்ரைன் இரவுநேர ட்ரோன் விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.
This time, the Moscow region felt the reach of Ukraine’s long-range capabilities. An oil refinery was hit at a distance of 500 kilometers. I thank the warriors of the Security Service of Ukraine, the Unmanned Systems Forces, the Special Operations Forces, the Defense Intelligence… pic.twitter.com/TayWYZYjEI
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) June 16, 2026
இந்த தாக்குதலில் மாஸ்கோவில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலும், தெற்கு கிராஸ்னோடார் பிராந்தியம் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு எண்ணெய் வழங்கும் ஒரு எண்ணெய் கிடங்கிலும் தீப்பற்றின.
இதனை மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் உறுதிப்படுத்தினார். இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, எண்ணெய் நிலையத்தை ட்ரோன் விமானம் தாக்கும்போது அது தீப்பிழம்பாக வெடிக்கும் காணொளியை பகிர்ந்தார்.
அத்துடன் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் நீடித்த ஆக்கிரமிப்பிற்கு இது ஒரு 'நியாயமான பதிலடி' என்று குறிப்பிட்டார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |