உக்ரைனின் நகரை தாக்கி உயிர்களை பறித்த ஏவுகணை! அதை செய்தால்தான் ரஷ்யாவை நிறுத்த முடியும் - ஜெலென்ஸ்கி
ரஷ்யாவின் ஏவுகணை உக்ரைனின் நகரை தாக்கியதற்கு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை தாக்குதல்
மத்திய உக்ரைன் நகரமான Kryvyi Rih மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்கியது. இந்த தாக்குதல் ஒரு குடியிருப்பு கட்டிடம், கல்வி சார்ந்த இடத்தையும் சேதப்படுத்தியது.
இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் பிராந்திய ஆளுநர் Serhiy Lysak கூறியுள்ளார்.
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதல் குறித்து கூறுகையில், "துரதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை இந்தத் தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது. அவர்களது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும், உக்ரேனியர்கள் யாரை எதிர்கொள்கிறார்கள் என்பதற்கான மற்றொரு நினைவூட்டலாக செயல்படுகிறது.
ரஷ்யா தானாகவே நின்றுவிடாது. கூட்டு அழுத்தம் மூலம் மட்டுமே அதை நிறுத்த முடியும். உலகில் உயிரை மதிக்கும் அனைவரின் அழுத்தமும் தேவை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |