உக்ரைனை சுற்றி வளைத்த ரஷ்யா: ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 12 பேர் பலி: ஜெலென்ஸ்கி கண்டனம்
ரஷ்ய நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல்
உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களை குறிவைத்து திங்கட்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமான தாக்குதல் என விவரித்துள்ளார்.
ரஷ்ய நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 40 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

உக்ரைனின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய நடத்திய இந்த தாக்குதலில் உக்ரைனின் பல்வேறு சொத்துகள் முழுமையாகவோ, பகுதி அளவோ சேதமடைந்துள்ளது.
டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 கொல்லப்பட்டதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் ரஷ்ய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
வடக்கு சுமி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 69 வயதுடைய பெண் ஒருவரும், 77 வயதுடைய ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்ய நடத்திய திடீர் தாக்குதலில் உக்ரைனின் 6 பிராந்தியங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |