போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய ரஷ்யா: சமமான உரிய பதிலடி கொடுத்த உக்ரைன்
ரஷ்யா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
போர் நிறுத்தத்தை மீறும் ரஷ்யா
இரண்டாம் உலகப் போரின் நினைவு தினத்தை முன்னிட்டு உக்ரைன் - ரஷ்யா இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை ரஷ்யா அத்துமீறி விட்டதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா நடத்தும் தாக்குதலுக்கு உரிய சமமான பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில் எல்லை கோட்டுக்கு அருகில் ரஷ்யா அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய படைகள் தாக்குதலுக்கு ட்ரோன்களை பயன்படுத்தியதாகவும், பதிலுக்கு உக்ரைனும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்ததாகவும் ஜெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான இராணுவ பதிலடி ஒருபுறம் இருக்க, இராஜதந்திர முறையிலான சர்வதேச ஆதரவை திரட்டுவதற்கான முயற்சிகளையும் ஜெலென்ஸ்கி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |