ரஷ்ய எண்ணெய் விநியோகம்: உக்ரைன் - ஐரோப்பிய ஒன்றியம் இடையே வெடிக்கும் மோதல்
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் அழுத்தத்தை ஜெலென்ஸ்கி நிராகரித்துள்ளார்.
உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரிசல்
ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் வற்புறுத்தி வருவதை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செயல் உக்ரைனை மிரட்டும் முயற்சி என்று ஜெலென்ஸ்கி விமர்சித்துள்ள நிலையில், உக்ரைன் மற்றும் அண்டை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ளது.

உக்ரைன் வழியாக ஹங்கேரி மற்றும் ஸ்லோவக்கியாவிற்கு ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்ல சோவியத் காலத்தில் உருவாக்கப்பட்ட துருஷ்பா(Druzhba) எரிபொருள் குழாயே இந்த சிக்கலின் மையமாக அமைந்துள்ளது.
சேதமடைந்த குழாய்
கடந்த ஜனவரி மாதம் ரஷ்யா நடத்திய தாக்குதலில் துருஷ்பா எரிபொருள் குழாய் சேதமடைந்ததாக உக்ரைன் தகவல் தெரிவித்தது.
ரஷ்ய எண்ணெயை பெரிதும் நம்பி இருக்கும் ஹங்கேரி இந்த துருஷ்பா எரிபொருள் குழாயை உடனடியாக சரி செய்யுமாறு வலியுறுத்தி வருகிறது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்த விவகாரத்தில் விரைவாக தீர்வு காண உக்ரைனிய வலியுறுத்தி வருகிறது.
அத்துடன் குழாயின் சேதத்தை பார்வையிட சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் இதற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி விமர்சனம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கை ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை நீர்த்து போக செய்யும் என்று ஜெலென்ஸ்கி உறுதியாக உள்ளார்.
மற்ற சந்தைகளில் ரஷ்ய எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ள நிலையில், உக்ரைன் நிலப்பரப்பு வழியாகவே அந்த எண்ணெயை கொண்டு செல்ல அனுமதிப்பது என்பது முறையாக இருக்காது என்று ஜெலென்ஸ்கி வாதிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் நடவடிக்கைகளை கண்டித்து, உக்ரைனுக்கு வழங்கப்பட வேண்டிய $103 பில்லியன் டொலர் கடனுதவியை தடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |