எலன் மஸ்க்குடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை: போருக்கு பிறகான நடவடிக்கை பற்றி விவாதம்
ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகின் முதல் பணக்காரரான எலன் மஸ்க்கை வீடியோ அழைப்பு மூலம் சந்தித்து உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உரையாற்றியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய சில நாள்களிலேயே உக்ரைனின் பல பகுதிகளில் இணையதள வசதி துண்டிக்கப்பட்டது.
இதனால் உக்ரைன் ராணுவத்துடன் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு பெரும் சிரமம் ஏற்பட்டது. மேலும் உக்ரைனில் நிலவும் போர் நிலவரங்களையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட முடியாமல் தடுமாறினார்.
#UkraineRussianWar | "If you have time after the war, you are welcome here": President Volodymyr Zelensky invites Elon Musk to Ukraine
— NDTV (@ndtv) March 6, 2022
(Video: Zelensky's official Instagram account) pic.twitter.com/o9RcOX4AWG
இதனை தொடர்ந்து, டெஸ்லா மற்றும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலகின் தற்போதைய முதல் பணக்காரரான எலன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோளின் உதவியுடன் உக்ரைனின் பல பகுதிகளுக்கு இணையதள வசதியை மீண்டும் வழங்கும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் உக்ரைனில் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் செல் கோபுரங்கள் அடையாத கடினமான இடங்களில் இணையதள சேவை வழங்கியது.
மேலும் ஆரம்பம் முதலே உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக இருந்த எலன் மஸ்க், ரஷ்யாவிடம் இருந்து பெரும் ஆயில் ஏற்றுமதியின் தேவையை உலகநாடுகள் புறக்கணிக்கும் வகையில் அமெரிக்கா தனது ஆயில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
Hate to say it, but we need to increase oil & gas output immediately.
— Elon Musk (@elonmusk) March 5, 2022
Extraordinary times demand extraordinary measures.
இந்தநிலையில் உக்ரைனில் ரஷ்யாவின் போர் 11வது நாளாக தொடரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வீடியோ அழைப்பு மூலம் சந்தித்து பேசியுள்ளார்.
அதன்பின் தனது ட்விட்டர் பதிவில் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க்குடன் உரையாடினேன்.
உக்ரைனுக்கு ஆதரவான அவரின் சொற்களுக்கும் செயல்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் எனவும் வரும் வாரத்தில் ஸ்டார்லிங்க் தொழிநுட்பத்தை அடுத்த தொகுப்பு உக்ரைனின் சிதைந்த நகரங்களில் வந்தடையும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் வருங்காலத்தில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளி திட்டத்தில் உக்ரைன் நிச்சியமாக பணியாற்றும் ஆனால் அது குறித்த பேச்சுவார்த்தைகள் இந்த போர் முடிவடைந்த உடன் மேற்கொள்ளப்படும் என பதிவிட்டிருந்தார்.
Talked to @elonmusk. I’m grateful to him for supporting Ukraine with words and deeds. Next week we will receive another batch of Starlink systems for destroyed cities. Discussed possible space projects ?. But I’ll talk about this after the war.
— Володимир Зеленський (@ZelenskyyUa) March 5, 2022