உக்ரைன் போரை நிறுத்த புடினுக்கு விருப்பமில்லை: டிரம்ப் விரும்புவது என்ன? ஜெலென்ஸ்கி விளக்கம் Zelenskyy explained strategic pressure on russia
உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவிடம் வலியுறுத்தியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் நிலைப்பாடு குறித்து ஜெலென்ஸ்கி விளக்கம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யாவிடம் வலியுறுத்தியதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து தலைமைப் பொறுப்பேற்பு விழாவில் பேசிய ஜெலென்ஸ்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அளவில் போரை நிறுத்துவதற்கான அழுத்தங்கள் அதிகமாக இருந்தாலும், ரஷ்ய ஜனாதிபதி புடின் போரை தொடர்வதிலேயே குறியாக இருப்பதாகவும், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அவர் தயாராக இல்லை என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கை
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் முக்கிய ராணுவ தளவாட கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்துதல். இதற்காக உக்ரைன் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.
அத்துடன் ரஷ்யாவின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை தீவிரப்படுத்துதல்.
உக்ரைன் நிலங்களை ஆக்கிரமித்தல், மக்களை ஒடுக்குதல், ஆகியவை ரஷ்யாவுக்கு சுமை உள்ளதாக மாற்றும் நடவடிக்கைகளை உக்ரைன் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது என்றும் ஜெலென்ஸ்கி விளக்கியுள்ளார்.
மேலும் உக்ரைனுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்தும் ஜெலென்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |