ஆபத்தான ரஷ்ய ஆயுதங்களின் சோதனைக்களமாக மாறும் உக்ரைன்: ஜெலென்ஸ்கி அச்சம்
கடந்த வாரத்தில் மட்டும் 500 ட்ரோன்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களின் சோதனைக்களமாக
உக்ரைனை ரஷ்யாவின் ஆபத்தான ஆயுதங்களின் சோதனைக்களமாக புடின் மாற்றி வருகிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ரஷ்யாவால் வியாழன் அன்று டினிப்ரோ மீது ஏவப்பட்ட ஏவுகணை உலக கவனத்தை ஈர்த்தது.
அணு ஆயுதம் பொருத்தக்கூடிய மிக ஆபத்தான ஏவுகணை அது என்பதே அச்சத்திற்கு காரணம். மட்டுமின்றி, ஷாஹெத் ட்ரோன்களின் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவால் ஏவப்பட்ட 73 ட்ரோன்களில் ஐம்பது எண்ணிக்கை சனிக்கிழமை இரவு சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முந்தைய வாரத்தில் மட்டும் ஈரானால் வடிவமைக்கப்பட்ட 460 ட்ரோன்கள் உக்ரைனின் வான்வெளியில் ரஷ்யாவால் ஏவப்பட்டது.
அச்சத்தையும் பீதியையும்
இந்த நிலையில் கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஆயுதங்களுக்கான சோதனைக் களம் அல்ல. உக்ரைன் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு.
ஆனால் ரஷ்யா இன்னும் நம் மக்களைக் கொல்வதற்கும், அச்சத்தையும் பீதியையும் பரப்பி, நம்மை பலவீனப்படுத்தும் முயற்சிகளைத் தொடர்கிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |