உக்ரைனில் பிரான்ஸ் இராணுவம்... மேக்ரானுடன் தீவிரமாக விவாதித்த ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஒரு நிலையான அமைதியை அடைய உதவும் வகையில் பிரான்ஸ் படைகளை களமிறக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மேக்ரானுடன் தீவிரமாக விவாதித்துள்ளதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெலென்ஸ்கி வெளிப்படை
ஐரோப்பிய நாடுகளின் முதன்மையான தலைவர்கள் எவரும் சமாதான முன்னெடுப்புகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டாம் என்று நேட்டோ தலைவர் மார்க் ருட்டே எச்சரித்துள்ள நிலையிலேயே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் கருத்து வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ஒரு நிலையான அமைதியை அடைய உதவும் வகையில் பிரான்ஸ் படைகளை களமிறக்க தயார் என ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்திருந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது, மேக்ரானின் திட்டம் தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, உண்மையிலேயே அடையக்கூடிய அமைதிக்கு நம்பகமான உத்தரவாதங்கள் அவசியம் என்றும் ஜெலென்ஸ்கி விளக்கமளித்துள்ளார்.
மார்க் ரூட்டே விரக்தி
மேலும், உக்ரைனில் அமைதிக்கான பாதையை நிலைநிறுத்துவதற்கு பங்களிக்கக்கூடிய படைகள் இருப்பது தொடர்பான ஜனாதிபதி மேக்ரானின் முயற்சியில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவிக்கையில், உக்ரைனுக்கு வலுவூட்டக்கூடிய ஆதரவை அதன் முழுமையான முன்னுரிமையாக பிரான்ஸ் அளித்து வருகிறது, இது தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் எப்போது தொடங்கும் என்பதைப் பற்றி பகிரங்கமாகப் பேசி ஐரோப்பிய தலைவர்கள் விளாடிமிர் புடினின் திட்டத்திற்கு ஏற்ப விளையாடுகிறார்கள் என்று நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே தமது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |