உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நல்ல வாய்ப்பு: ஜெலன்ஸ்கி நம்பிக்கை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஒரு நல்ல வாய்ப்பு
This is exactly what we are fighting for. We fight with weapons and diplomacy. Right now, we have a good chance to end this war quickly and secure peace. We have solid security understandings with our European partners.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 14, 2025
உக்ரைன் முப்பது நாட்கள் போர் நிறுத்தம் ஒன்றிற்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவந்து, அமைதியை நிலைநாட்ட நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது என்று கூறியுள்ளார் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.
நமது ஐரோப்பிய கூட்டாளர்களுடன் உறுதியான பாதுகாப்புப் புரிதல்கள் நமக்கு உள்ளன என்று கூறியுள்ள ஜெலன்ஸ்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் முதல் படியை நெருங்கிவிட்டோம் என்று கூறியுள்ளார்.
பின்னர், அமெரிக்காவும் மற்ற கூட்டாளர்களும் ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்திய அவர், புடின் போர் நிறுத்தத்தை முடிந்தவரை நீட்டிப்பார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ரஷ்ய தரப்பிலிருந்து நேர்மறையான எண்ணங்கள் வருவதை தான் காண்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்யா போர் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளும் என தான் எண்ணுவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |