முழு சண்டை நிறுத்தத்திற்கு தயார்: புடினை நேருக்கு நேர் பேச அழைத்த ஜெலென்ஸ்கி
போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
புடினுக்கு ஜெலென்ஸ்கி அழைப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு நேருக்கு நேர் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் நோக்கில் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளார்.
வியாழக்கிழமை இது தொடர்பான அழைப்பு கடிதத்தை ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தன்னுடைய இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலம் முழுவதும் முழுமையான சண்டை நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நீண்ட கால போரினால் ரஷ்ய மக்களும் மிகுந்த சோர்வடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜெலென்ஸ்கி, உக்ரைனின் இறையாண்மையை பாதுகாக்க உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா முன்வராவிட்டால் உக்ரைன் தொடர்ந்து போராடும் என்றும் ஜெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |