இந்தியாவுக்கு நன்றி கூறுகிறேன்: ஜப்பானில் பிரதமர் மோடியை சந்தித்த ஜெலென்ஸ்கி
ஜி7 மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் ஜி7 மாநாடு
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஐரோப்பிய நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர், ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
அங்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு நன்றி கூறும் ஜெலென்ஸ்கி
அவரது பதிவில், 'ஜப்பானில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினேன். உக்ரேனிய அமைதி பார்முலா முன்முயற்சி பற்றி அவரிடம் விரிவாக பேசினேன், அதனை செயல்படுத்த இந்தியாவை அழைத்தேன். மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் மற்றும் நடமாடும் மருத்துவனைகளில் உக்ரைனின் தேவைகள் குறித்து நான் பேசினேன்.
எங்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை ஆதரித்ததற்காக நன்றி கூறுகிறேன். குறிப்பாக, சர்வதேச அமைப்புகளின் மேடைகளில் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி கூறுகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Had a meeting with Prime Minister of India @narendramodi in Japan. I briefed the interlocutor in detail on the Ukrainian Peace Formula initiative and invited India to join its implementation. I spoke about Ukraine's needs in humanitarian demining and mobile hospitals. I thank…
— Володимир Зеленський (@ZelenskyyUa) May 20, 2023
முன்னதாக, ஜி7 மாநாட்டில் வீடியோ வாயிலாக ஜெலென்ஸ்கி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நேரடியாக ஜப்பான் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Ukrainian President's Office
PMOIndia (Twitter)