ஜெலென்ஸ்கி-மன்னர் மூன்றாம் சார்லஸ் சந்திப்பு: உக்ரைன், பிரித்தானியா உறவை வலுப்படுத்துமா?
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, சாண்ட்ரிங்ஹாமில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
லண்டனில் உள்ள பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பல முக்கிய உலகத் தலைவர்களை சந்தித்த பின்னர், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஹெலிகாப்டர் மூலம் நோர்போக்கில் உள்ள அரச இல்லமான சாண்ட்ரிங்ஹாமிற்கு சென்றார்.
First photos from Volodymyr Zelensky's meeting with King Charles III of the United Kingdom pic.twitter.com/zdG4wGnuv0
— NEXTA (@nexta_tv) March 2, 2025
இந்நிலையில், ஜெலென்ஸ்கி வருவதை காண, உக்ரேனிய கொடிகளுடன் பலர் சாண்ட்ரிங்ஹாம் இல்லத்திற்கு வெளியே காத்திருந்தனர்.
மாலை 5.25 மணியளவில், ஒரு ராணுவ ஹெலிகாப்டர் எஸ்டேட்டின் மீது தாழ்வாக பறந்து, பின்னர் தரையிறங்கியது.
சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட புகைப்படங்களில், எஸ்டேட்டின் நுழைவாயிலில் மன்னர் சார்லஸும் ஜெலென்ஸ்கியும் கைகுலுக்கி கொண்டனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் ஏற்பட்ட மோசமான உரையாடலுக்குப் பிறகு, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சாண்ட்ரிங்ஹாம் பிரித்தானிய மன்னர் 3ம் சார்லஸை சந்தித்துள்ளார்.
நேற்று பிரித்தானியா பிரதமர் கீர் ஸ்டார்மருடனான சந்திப்புக்கு பிறகு, பிரித்தானிய அரசு உக்ரைனின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் 2.6 பில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மன்னர் சார்லஸ் உக்ரைனுக்கு தனது ஆதரவை பலமுறை வெளிப்படுத்தியுள்ளார், இருப்பினும் குறிப்பிட்ட இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் பிரித்தானியா இடையிலான உறவை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |