மன்னரின் ஆதரவை பெற்ற ஜெலென்ஸ்கி; ஸ்டார்மர் அறிவித்த நான்கு அம்சத் திட்டம்
ஜெலென்ஸ்கி, பிரித்தானிய மன்னர் சார்லஸின் ஆதரவை பெற்ற நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நான்கு அம்சத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்து, உக்ரைனுக்கான ஆதரவையும் பாதுகாப்பு உறுதிகளையும் பெற்றார்.
இந்த சந்திப்பு ஐரோப்பிய தலைவர்கள் நடத்திய உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உச்சி மாநாட்டின் போது, Sandringham Estate எனப்படும் மன்னரின் தனிப்பட்ட மாளிகையில் நடைபெற்றது.
உணர்வுபூர்வமான வரவேற்பு
ஜெலென்ஸ்கி ஹெலிகாப்டரில் மாளிகையை வந்தடைந்தபோது, உக்ரைன் கொடிகளை ஏந்திய பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்.
"மிகவும் நல்ல சந்திப்பு" என கூறிய ஜெலென்ஸ்கி, "மன்னர் சார்லஸின் ஆதரவுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" எனப் பாராட்டினார்.
மன்னர் சார்லஸ் உக்ரைனில் போராடும் வீரர்களைச் சந்தித்துள்ளார் என்றும், "உக்ரைனுக்கு எதிரான அநியாயமான தாக்குதலை தடுக்க உலகம் ஒன்று சேர வேண்டும்" என அவர் தெரிவித்திருந்தார்.
ட்ரம்ப்-செலன்ஸ்கி முரண்பாட்டுக்குப் பிறகு நடந்த சந்திப்பு
ஜெலென்ஸ்கியின் இந்த லண்டன் பயணம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் நடந்த விவாதத்திற்குப் பின் நடந்தது. இதன் காரணமாக, உக்ரைன்-ரஷ்யா அமைதி பேச்சுவார்த்தை சிக்கலில் மாட்டிக் கொண்டது.
உக்ரைனுக்காக பிரித்தானியா உறுதி அளித்த திட்டம்
உச்சி மாநாட்டின் முடிவில், பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர், உக்ரைனுக்கு ஆதரவாக நான்கு அம்சத் திட்டத்தை வெளியிட்டார்:
1. உடனடியாக இராணுவ உதவியை வழங்குவது
2. உக்ரைன் பாதுகாப்புக்காக புதிய கூட்டணிகளை உருவாக்குவது
3. சமாதானத்திற்கான நீண்டகால உத்தரவாதங்களை வழங்குவது
4. உலக நாடுகளின் ஆதரவை உறுதி செய்யுதல்
ட்ரம்புக்கு முன்னதாக மன்னரை சந்தித்த ஜெலென்ஸ்கி
இந்தச் சந்திப்பு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரித்தானியாவிற்கு செல்வதற்கு முன்பாகவே நடைபெற்றது. இதனால், உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆதரவு மேலும் வலுப்பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Ukraine UK relationship, Keir Starmer Volodymyr Zelenskyy, King Charles III