இணையத்தை மொத்தமாகப் புரட்டிப்போட்ட உக்ரைன் ஜனாதிபதியின் நடனம்
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பழைய காணொளி ஒன்று இணையத்தை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ளது.
ஜெலென்ஸ்கியும் மூன்று ஆண்களும்
உக்ரைனின் ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவதற்கு முன்பு, ஜெலென்ஸ்கி ஒரு பல்துறை கலைஞராக இருந்தார் என்பதுடன் நகைச்சுவை நடிகராகவும் நாடக நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையிலேயே ஜெலென்ஸ்கியும் மூன்று ஆண்களும் வித்தியாசமான உடையில், பெண்களுக்கான குதிகால் ஷூ அணிந்து நடனமாடும் ஒரு காணொளி தற்போது இணையைத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
ஜெலென்ஸ்கியுடன் நடனமாடும் கலைஞர்கள் சக நடிகர்கள் யெவ்ஜெனி கோஷெவாய், ஸ்டீபன் கசானின் மற்றும் அலெக்சாண்டர் பிகலோவ் என்று கூறப்படுகிறது. குறித்த காணொளியானது 2014ல் வெளியாகியிருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.
உடை தொடர்பில் விமர்சனம்
ஆனால், அந்த காணொளி தற்போது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பெரும்பாலும் ஜனாதிபதி ட்ரம்பின் கடும் ஆதரவாளர்கள் மற்றும் புடின் ஆதரவாளர்களால் முன்வைக்கப்படுகிறது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர், கோட் சூட் எதுவும் அணிந்துகொள்ள மறுக்கும் ஜெலென்ஸ்கி, கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பின் போது அணிந்திருந்த உடை தொடர்பில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அது வெறும் கவனம் ஈர்க்கும் நாடகம் என்று ட்ரம்பின் தீவிர ஆதரவாளர்களால் விமர்சிக்கப்பட்டது. தற்போது இந்த பழைய காணொளியும் ஜெலென்ஸ்கியை அவமானப்படுத்தும் கருத்துகளால் நிரம்பியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |