புடின் - ஜெலென்ஸ்கி சந்திப்பு: ரஷ்யா தெரிவித்துள்ள புதிய விளக்கம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு குறித்து கிரெம்ளின் புதிய விளக்கத்தை அளித்துள்ளது.
புடின் - ஜெலென்ஸ்கி சந்திப்பு
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2022ம் ஆண்டு தொடங்கிய போர் தாக்குதல் இடைவிடாமல் நடைபெற்று வருகிறது.
இருநாடுகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் எந்தவொரு இறுதி அமைதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் போர் அமைதி ஒப்பந்தங்களை இறுதி செய்யும் நோக்கத்திற்காக மட்டுமே ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவரும் சந்திக்க முடியும் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை டிமிட்ரி பெஸ்கோவ்-வை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில், புடின் - ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு நோக்கம் மிகவும் முக்கியம். அவர்கள் ஏன் சந்திக்க வேண்டும்? மாஸ்கோவில் சந்திப்பு நடத்த புடின் எப்போது தயாராக இருக்கிறார் என்று டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். மேலும் அந்த சந்திப்பு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அத்துடன் அந்த சந்திப்பு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |