ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜெலென்ஸ்கி தயார்... ட்ரம்ப் அறிவிப்பு
உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என ஜெலென்ஸ்கி தம்மிடம் கூறியதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கருத்து மோதலுக்குப் பின்னர்
அத்துடன் அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே கனிம வள ஒப்பந்தமும் மிக விரைவில் முன்னெடுக்கப்பட இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடந்த கருத்து மோதலுக்குப் பின்னர் ஜெலென்ஸ்கி தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை தமக்கு அனுப்பியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வலுவான தலைவர் ட்ரம்ப்
அமெரிக்க நாடாளுமன்ற அவையில் முதல் முறையாக உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப் இது தொடர்பில் பதிவு செய்துள்ளார். உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியிடம் இருந்து தமக்கு ஒரு முக்கியமான கடிதம் வந்தது என்றும்,
அந்த கடிதத்தில், நீடித்த அமைதியை நெருங்கி வர உக்ரைன் தயாராக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஓவல் அலுவலத்தில் நடந்த கருத்து மோதலை அடுத்து வலுவான தலைவர் ட்ரம்ப் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |