போர் முடிந்ததும் பதவி விலக தயார் - உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி உறுதி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடிந்தவுடன் தான் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Axios-க்கு அளித்த பேட்டியில், "போர் முடிந்தால், தேர்தலுக்கு செல்லமாட்டேன். ஏனெனில் என் நோக்கம் தேர்தல் அல்ல, போரை முடிப்பதே" என அவர் கூறியுள்ளார்.
2019-ல் நடந்த தேர்தலில் ஜெலென்ஸ்கி உக்ரைனின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, 2024-ல் தேர்தல் நடைபெறவேண்டியது. ஆனால், 2022-ல் ரஷ்யா உக்ரைன் மீதி படையெடுத்ததையடுத்து, அமுல்படுத்தப்பட்ட இராணுவ சட்டம் (Martial Law) காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால், அவரது அரசியல் சட்டபூர்வத்தன்மை குறித்து ரஷ்யா தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறது.
"போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டால், பாதுகாப்பு சூழ்நிலை தேர்தலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும். போர் நடக்கும்போது தேர்தல் நடத்த முடியாது. மக்கள் சட்டபூர்வமான, திறந்த மற்றும் ஜனநாயக தேர்தலை பெறவேண்டும்" என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் ஆகஸ்டில் நடந்த Oval Office சந்திப்பிலும், "அமைதி ஏற்பட்டதும் தேர்தல் நடத்தப்படும்" என ஜெலென்ஸ்கி உறுதியளித்தார்.
செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், 59 சதவீத உக்ரேனியர்கள் ஜெலென்ஸ்கியை நம்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Zelenskyy resign after war, Ukraine Russia War ends, Ukraine election