75 பில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்தது! அமெரிக்காவின் உதவி தொகை குறித்து ஜெலென்ஸ்கி விளக்கம்
அமெரிக்கா, உக்ரைனுக்கு வழங்கிய உதவி தொகையில் முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி விளக்கம் அளித்துள்ளார்.
உக்ரைனுக்கான அமெரிக்காவின் உதவி தொகை
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 3வது ஆண்டை நெருங்கியுள்ள நிலையில், போர் நடவடிக்கையில் உதவுவதற்காக அமெரிக்கா போன்ற உக்ரைனின் நட்பு நாடுகள் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய உதவி தொகையில் சில முரண்பாடுகள் வெளிப்பட்டுள்ள நிலையில், இது குறித்து ஜெலென்ஸ்கி பதிலளித்துள்ளார்.
Zelensky Denies Claims That the U.S. Gave Ukraine $177 Billion During the War
— NEXTA (@nexta_tv) February 2, 2025
He insists that Kyiv has received only $75 billion.
"I don’t know where all that money is," he said in an interview with Associated Press. pic.twitter.com/PElCMYw06b
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவிடம் இருந்து 177 பில்லியன் டொலர்கள் உதவி கோரப்பட்ட நிலையில், 75 பில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த வித்தியாசமானது உதவித் தொகை விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவிடம் இருந்து 75 பில்லியன் டொலர்கள் மட்டுமே உதவி தொகை கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
Holy shit. We were right... again.
— Gunther Eagleman™ (@GuntherEagleman) February 2, 2025
Zelenskyy claims Ukraine only received $75 billion of the over $177B sent in aid.
Where. Did. The. Money. Go.
The American media will never share this. Make it viral!pic.twitter.com/OexXnJd4VP
மேலும் அந்த பணம் எங்கே என்று தனக்கு தெரியவில்லை என்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |