“புடின் முகத்தில் குத்த நான் தயார்”…உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பகீர் கருத்து:வீடியோ ஆதாரம்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் முகத்தில் குத்த நான் தயாராக இருக்கிறேன் என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்தும், அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது.
In an interview with the LCI channel, #Ukrainian President #Zelenskyy said that he was ready to "punch #Putin in the face" even tomorrow, at the first opportunity. pic.twitter.com/KYI1fszi0z
— NEXTA (@nexta_tv) December 17, 2022
அத்துடன் ரஷ்ய படைகளை கைப்பற்றி வைத்து இருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல், போர் நடவடிக்கை உக்ரைன் கைவிடப் போவது இல்லை என்று அறிவித்தது.
இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை இன்னும் பல மாதங்கள் தொடரும் என இராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புடினின் முகத்தில் குத்துவேன்
இந்நிலையில் LCI தொலைகாட்சிக்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரஷ்ய ஜனாதிபதி புடினின் முகத்தில் நான் குத்த தயாராக இருக்கிறேன்” என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த முதல் வாய்ப்பு நாளையாக இருந்தாலும் கூட நான் தயாரகவே இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
The portrait of President #Zelenskyy, taken for the cover of #TIME magazine, was sold for 6 million UAH.
— NEXTA (@nexta_tv) December 17, 2022
All proceeds from the auction will be used to purchase electric generators for schools in #Kyiv region.
?5 Kanal pic.twitter.com/pMsrUesiMG