3 நாட்கள் ஆகிறது... போருக்கு மத்தியில் செய்தியாளரிடம் உருகிய ஜெலென்ஸ்கி! வைரலாகும் வீடியோ
3 நாட்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்கவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உருக்கமாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
உக்ரைன் மீது 7வது நாளாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கீவில் தங்கியிருக்கிறார்.
இந்நிலையில், போருக்கு மத்தியில் கீவில் தான் தங்கியிருக்கும் இடத்தில் வைத்து ஜெலன்ஸ்கி செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
இதன்போது, நீங்கள் உங்கள் குடும்பத்தை, குழந்தைகளை பார்த்தீர்களா? என நிருபர் ஒருவர் ஜெல்ன்ஸ்கியிடம் கேட்க, அதற்கு இல்லை, என்னால் முடியாது என பதிலளித்தார்.
கடைசியாக நீங்கள் எப்போது அவர்களை பார்த்தீர்கள் என கேட்டதற்கு, போருக்கு முன் என பதிலளித்த ஜெலன்ஸ்கி, உடனே இல்லை, 3 நாட்களுக்கு முன் தான் பார்த்தேன், போருக்கு மத்தியில் தான் அவர்களை பார்த்தேன் என உருக்கமாக தெரிவித்தார்.
Ukrainian President reacts to bombing near Babyn Yar Holocaust memorial site and confirms he hasn't see his family 'in three days'.
— Sky News (@SkyNews) March 2, 2022
Latest: https://t.co/X3flQUk9BR pic.twitter.com/or3PZblHFr
தனது குடும்பத்தை 3 நாட்களாக பார்க்கவில்லை என ஜெலன்ஸ்கி உருக்கமாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.