எதிரிகளின் இழப்புகள் எங்களுக்கு தேவை! உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
போர்கள் கடுமையானவை, ஆனால் நாங்கள் முன்னோக்கி நகர்கிறோம் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அணை சேதம்
உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் ககோவ்கா நீர்மின் நிலைய அணையின் உடைப்பு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, கெர்சனில் அணை சேதத்தினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஒரு வார காலமாக நடந்து வருகிறது.
இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்தித்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிதியுதவி அளிப்பதாக உறுதியளித்தார்.
ரஷ்யாவுக்கு எதிராக எதிர்த்தாக்குதல் நடத்த உக்ரைன் துவங்கிய நிலையில் மற்றொரு அணை சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
The battles are fierce, but we are moving forward, and this is very important. The enemy's losses are exactly what we need. Although the weather is unfavorable these days – the rains make our task more difficult – the strength of our warriors still yields results, and I thank… pic.twitter.com/JikNXOEGvm
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 12, 2023
ஜெலென்ஸ்கியின் பதிவு
இந்த நிலையில், ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், 'போர்கள் கடுமையானவை, ஆனால் நாங்கள் முன்னோக்கி நகர்கிறோம், இது மிகவும் முக்கியமானது. எதிரியின் இழப்புகள் நமக்கு தேவையானவை. இந்த நாட்களில் வானிலை சாதகமற்றதாக இருந்தாலும் - மழை எங்கள் பணியை கடினமாக்குகிறது - எங்கள் வீரர்களின் வலிமை இன்னும் பலனைத் தருகிறது.
மேலும் இப்போது போரில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், தொடர்புடைய பகுதிகளில் எங்கள் போர் படைப்பிரிவுகளுக்கு ஆதவரளிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜெனரல்கள் சிர்ஸ்கி மற்றும் டர்னாவ்ஸ்கி ஆகியோர் இன்று நாம் ஏற்கனவே அடைந்த வெற்றிகள் குறித்தும், எங்களுக்கு வலுவூட்டல் தேவைப்படும் முன்னணி புள்ளிகள் குறித்தும், மேலும் ரஷ்ய நிலைகளை உடைக்கக்கூடிய செயல்கள் குறித்தும் தெரிவித்தனர்.
புதிதாக ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தின் கிராமங்களில் இப்போது அதன் சரியான இடத்திற்கு திரும்பும் ஒவ்வொரு உக்ரேனியனின் கொடிக்கும் எங்கள் தோழர்களுக்கும் நன்றி! எங்கள் பரிவர்த்தனை நிதியை கணிசமான நிரப்பியதற்கும் நன்றி!' என தெரிவித்துள்ளார்.
President Of Ukraine / flickr